பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

0 351

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான எழுத்து தேர்வு கட்டணம் 150 ரூபாயிலிருந்து, 225 ரூபாயாகவும் இறுதி ஆண்டு திட்டப் பணிகளுக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு 2024 - 25 ஆம் கல்வி ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் பருவ தேர்விலிருந்து நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments