திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10 டூவீலர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரி
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.
விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், நிற்காமல் சென்ற லாரியை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மதுரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Comments