“மேலயா கைய வைக்குற”..?..அரசு பேருந்து ஓட்டுநரின் தரமான ஆக்டிங் சம்பவம்..!

0 754

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வழிவிட சொல்லி ஹாரன் அடித்த அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தர்மஅடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு புறநகர் பேருந்து ஒன்று ஒட்டன்சத்திரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுனர் கார்த்திகேயன்இயக்கினார். பேருந்துக்கு முன்பாக வழி விடாமல் சென்ற இருசக்கர வாகனங்களை விலகிபோகச்செய்வதற்காக ஓட்டுனர் கார்த்திகேயன் ஹாரன் அடித்ததால் ஆவேசம் அடைந்த இரு சக்கர வாகன ஓட்டிகள், சேனன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை மறித்து தகராறு செய்து ஓட்டுனர் கார்த்திகேயனை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.

அடி விழுந்ததும் பதிலுக்கு மல்லு கட்டாமல் சாலையில் மயங்கி விழுந்தது போல படுத்துக்கொண்டதால் , உடனடியாக 108 ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு ஓட்டுனர் கார்த்திகேயனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஓட்டுனரை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பேருந்து பயணிகள் நடுவழியில் தவித்து நின்றனர். இதையடுத்து ஆவேசம் அடைந்த பயணிகள் , பொதுமக்கள், ஓட்டுனரை தாக்கிய 4 பேரைப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தப்பிச்செல்ல முயன்ற 4 பேரையும் போலீசார் விரட்டிப்பிடித்து வேனில் ஏற்றி காவல் நிலியம் அழைத்துச்சென்றனர்.

வேடசந்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் காளனம்பட்டி சேர்ந்த மாரிமுத்து, பூத்தாம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன், மாரியம்மாள், சந்தோஷ் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவத்தால் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தாக்கப்பட்ட ஓட்டுனர் கார்த்திகேயன் மருத்துவமனையில் அமர்ந்து தன் மீதான தாக்குதல் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments