கிணற்றில் தாய், இரண்டு பெண் குழந்தைகள் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

0 478

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, விவசாய கிணற்றில் இருந்து தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை போலீசார் சடலமாக மீட்டனர். காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன்-ஸ்ரீதேவி தம்பதிக்கு வனிஷா என்ற ஆறு வயது குழந்தையும் ஆஷிகா என்ற மூன்று வயது குழந்தையும் இருந்தனர். கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஸ்ரீதேவி தனது பெரிய குழந்தையின் காலில் தனது காலுடன் ரிப்பனை கட்டிக்கொண்டு சிறிய குழந்தையுடன் அருகே உள்ள பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments