போலந்தில் இருந்து உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி
போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு, ரயில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றடைந்தார். ஒருநாள் பயணமாக கீவ் ரயில் நிலையம் வந்த மோடியை உக்ரைன் அரசு உயர் அதிகாரிகளும் இந்திய ராணுவ அதிகாரிகளும் வரவேற்றனர்.
ரயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட மோடியை, வழிநெடுகிலும் இருபுறமும் திரண்டிருந்த இந்தியர்கள் உற்சாகத்துடன் கையசைத்து வரவேற்றனர்.
மோடி தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலில், இந்திய வம்சாவளியினர், கையில் தேசியக் கொடி ஏந்தி பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிட்டு மோடியை வரவேற்றனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் உயர்மட்டக் குழுவினருடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Comments