கன்னியாகுமரியில் மீனவர் வலையில் அதிக அளவில் சிக்கிய கிளாத்தி மீன்கள்... கோழித்தீவன நிறுவனங்களுக்குகிலோ ரூ.10-க்கு விற்பனை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன.
மீன்பிடி துறைமுகத்தில் மலைபோல் குவிந்த சிறிய ரக கிளாத்தி மீன்களை சமையலுக்குப் பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், விலை குறைந்து கிலோ 10 ரூபாய்க்கு கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அதேசமயம், ஏற்றுமதி ரக புள்ளி கலவாய் மீன்கள் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை ஆகின.
Comments