மாவட்ட ஆட்சியரகத்தில் மீதமிருந்த மதுவை குடிப்பதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரின் கைகளை ஆட்சியரக ஊழியர்கள் கட்டி வைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் அவரது சகோதரர் நவீன் ஆகியோர் உறவினரின் குழந்தையை விடுதியில் சேர்ப்பது தொடர்பாக குழந்தைகள் நலப்பிரிவில் மனு அளிக்க சென்றிருந்தனர்.
இருவருமே மதுபோதையில் இருந்ததாகவும், பிரவீன் குடித்து விட்டு மீதம் வைத்திருந்த மதுவை நவீன் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதில், இருவருக்கும் இடையே தகராறில் ஈடுபட்டதால் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
அப்போது நவீன் மற்றவர்களையும் தரக்குறைவாக பேசவே அங்கிருந்த ஊழியர்கள் சிலர் அவரது கையை கட்டி வைத்து போலீஸாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
Comments