தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர்களிடையே யார் முதலில் செல்வது என சேசிங் செய்ததில் பைக் மீது மோதி இளைஞர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், குன்னத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ பாரதி வித்யாஸ்ரம் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டு, சேசிங் செய்த போது நேரிட்ட விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
கண்ணமங்கலம் நோக்கி சென்ற போது பைக்கில் எதிரே வந்த இரும்பேட்டையைச் சேர்ந்த 21 வயது யோகேஷ் மீது பேருந்து மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தை சாலையின் நடுவழியில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments