தென்காசியில் நகராட்சி அனுமதியின்றி தி.மு.க கவுன்சிலர் நடத்திய டூவிலர் பார்க்கிங் கூடத்திற்கு சீல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய தற்காலிக பேருந்து நிலைய வளாகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் நடத்தி வந்த டூவீலர் பார்க்கிங் கூடத்திற்கு நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் தரப்பினர், நகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
Comments