அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டெனால்டு டிரம்ப் சுயநலம் மிக்கவர் என பில் கிளிண்டன் விமர்சனம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டெனால்டு டிரம்ப், எப்போது பேசினால் தான், தான் என்று சுயநலத்துடன் பேசும் நபர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் விமர்சித்தார்.
சிகாகோ நகரில் ஜனநாயக கட்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், டெனால்டு டிரம்ப் போல் அல்லாமல் நமது வேட்பாளர் கமலா ஹாரிஸ், நீங்கள், உங்களது என்று மற்றவரின் நலனுக்காக பேசும் நபர் என்று பாராட்டினார்.
அதிபராக மற்றொரு முறை நீடிக்க வாய்ப்பு இருந்தும் வாய்ப்பை விட்டுக்கொடுத்தவர் அதிபர் ஜோ பைடன் என்று பில் கிளிண்டன் பாராட்டு தெரிவித்தார். அவரது பெருந்தன்மை, அவருக்கு புகழ் மற்றும் நன்மதிப்பை தேடித்தரும் என்றும் புகழாரம் சூட்டினார்.
Comments