கிருஷ்ணகிரியில் பள்ளி சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம்... சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

0 468

கிருஷ்ணகிரியில் பள்ளி சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவும் கிருஷ்ணகிரியில்  விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவராமனை கைது செய்வதற்கு முன் அவர் விஷம் அருந்தியதாக கூறப்படும் நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சிவராமனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இரண்டு இடங்களில் இது போன்ற பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பெற்றோர் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும், புகார்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற சம்பவம் நிகழ்ந்தால் பள்ளிக்கோ, குடும்பத்திற்கோ கெட்ட பெயர் வரும் என யாரும் அஞ்ச வேண்டாம் என்றும், 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments