திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு... நீரை சிக்கனமாக பயன்படுத்த தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி திருமலையில் மழை பொய்த்து, நீர் ஆதாரங்களாக விளங்கும் அணைகளின் நீர் இருப்பு வெகுவாக சரிந்துள்ளதால், ஏழுமலையான் கோயிலைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கான தினசரி நீர் சப்ளை நேரத்தை 16 மணி நேரமாக தேவஸ்தானம் குறைத்துள்ளது.
நீர் தேவையை சரிகட்ட, திருப்பதியிலிருந்து லாரிகள் மூலம் நீர் எடுத்துவர தனியார் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
திருமலை பாலாஜி நகரில் வசித்துவரும் சுமார் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே நீர் சப்ளை வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Comments