ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடும் போலீசார்

0 669

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலையும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக கருதப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் மூலமாகவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அனைவரையும் ஒருங்கிணைத்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அவரது செல்போன் எண்களை ஆய்வு செய்தனர்.

அதில் மொட்டை கிருஷ்ணன்கடந்த மே மாதம் அடையாறில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்ததும், சில வீடுகளுக்கு சென்றதும் தெரியவந்தது.

இதனால் அடையாறில் சம்போ செந்தில் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், லாட்ஜ் மற்றும சர்வீஸ் அபார்ட்மெண்ட் பணியாளர்களிடம் அவரது புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் மொட்டை கிருஷ்ணன்சிங்கப்பூரில் இருந்து தப்பி சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிருஷ்ணனை பிடித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம் மற்றும் சம்போ செந்தில் இருப்பிடம் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்து உள்ளனர்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments