தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் முதலீட்டில் 64 ஆயிரத்து 968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும், 51 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீட்டில் 41 ஆயிரத்து 835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 புதிய தொழில் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.
Comments