மருத்துவமனைகளில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு உள்நோயாளியுடனும் ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்கள் மட்டும் இருக்க வேண்டும், அவருக்கு பாஸ் வழங்கி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குள் வரும் நபர்களைத் தீவிரமாக கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண் பணியாளர்கள் நடமாடும் பகுதிகள், நுழைவாயில், பார்க்கிங் போன்ற இடங்களில் எப்போதும் விளக்குகள் எரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவுப்பணியில் உள்ள பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் மருத்துவப் பணியாளர்களை இரவுப் பணியில் அமர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடு திரும்புவோருக்கு மருத்துவமனை நிர்வாகம் பாதுகாப்பான வாகன வசதி ஏற்படுத்தித் தரவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது
Comments