வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவுடன் நெல்சன் மனைவி பேசியது என்ன ? ஆம்ஸ்ட்ராங் கொலையில் என்ன லிங்க்..? போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்

0 1276

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவான வழக்கறிஞர் ஒருவருடன் பலமுறை செல்போனில் உரையாடியதாக ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன், மலர்கொடி, சிவா, ஹரிதரன் , அஸ்வத்தாமன், பிரபல ரவுடி நாகேந்திரன் , ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்ட வழக்கறிஞர்கள் மொட்டை கிருஷ்ணன், சிவாவும் காரிலேயே மதுரை சென்ற நிலையில் தனது காரை சென்னையில் இருக்கும் தனது வீட்டில் விடுமாறு சிவாவிடம் கொடுத்து விட்டு கிருஷ்ணா மட்டும் தனியாக மாயமாகியுள்ளார். பின்னர் காரில் சிவா சென்னை மாதவரம் வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் கிருஷ்ணா குறித்து சிவாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணா மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து தாய்லாந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் வழக்கறிஞர் கிருஷ்ணாவிண் செல்போன் நம்பரை வைத்து அவர் யார் யாருடன் பேசி வருகிறார் என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.

மேலும் அவருடன் முன்பு பேசியவர்களின் பட்டியலையும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் கேட்டுப்பெற்றனர். கிருஷ்ணாவுடன் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா பல முறை போனில் பேசியது தெரியவந்தது.

வழக்கறிஞர் கிருஷ்ணா தப்பி சென்றதற்கு, நெல்சனின் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா ? என்கிற கோணத்தில் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கிருஷ்ணா தனது பள்ளிக்கால தோழர் என்ற மோனிஷா, தான் வேறொரு வழக்கு தொடர்பாக கிருஷ்ணாவிடம் பேசியதாகவும், அவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளது தனக்கு தெரியாது என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் நண்பர்கள் எல்லாம் மொத்தமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஆதாரமாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து தாங்கள் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் மீண்டும் வர வேண்டும் என்றும், தங்களிடம் சொல்லாமல் வெளியூர் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியும் மோனிஷாவை வீட்டுக்கு அனுப்பிவைத்ததாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments