புதுச்சேரியில் பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் காயம்
புதுச்சேரியில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த கல்லூரி மாணவர் கீழே விழுந்ததில் முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
புதுச்சேரியிலிருந்து மதகடிப்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்திற்குள் அதிக கூட்டம் இருந்ததால் கல்லூரி மாணவர்கள் சிலர் இரண்டு படிக்கட்டுகள் மற்றும் ஏணிப்படியிலும் தொங்கியவாறு பயணித்தனர்.
பேருந்து அரியூர் சென்ற போது பிடி நழுவிய மாணவர் ஒருவர் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
Comments