இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தென்பட்ட 'சூப்பர் மூன்'
பெளர்ணமி நிலவு, பூமிக்கு மிக அருகே வரும் நிகழ்வான 'சூப்பர் மூன்', இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தென்பட்டது. பூமியை சுற்றிவரும் நிலவு, பூமிக்கு அருகே வரும்போது மிகவும் பிரகாசமா காட்சியளிக்கும். அன்றைய தினம் பெளர்ணமியாக அமைந்தால் இன்னும் கூடுதல் வெளிச்சத்துடன் காணப்பட்டு ”சூப்பர் மூன்” என்றழைக்கப்படுகிறது.
இந்தாண்டு மொத்தம் 4 முறை ”சூப்பர் மூன்” தென்படும் என்றும், அடுத்ததாக செப்டம்பர் 17-ஆம் தேதி சூப்பர் மூனை பார்க்கலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் சூப்பர் மூன் மிகவும் அற்புதமாக காட்சியளித்ததாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
Comments