இஸ்ரேலில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக ஹமாஸ் மிரட்டல்

0 413

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலுக்குள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தப்போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில், கடந்த ஞாயிற்றுகிழமை யூத தேவாலயம் அருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.

மக்கள் அதிகம் கூடும் தேவாலயம் நோக்கி, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சென்றுகொண்டிருந்தபோது, அவன் பையில் இருந்த வெடிகுண்டு முன்கூட்டியே வெடித்ததாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஹமாஸும், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments