ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிக்கையில் புதிய தகவல்
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.எஸ்.ஐ-யை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு, பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புள்ள கும்பல் அடைக்கலம் கொடுத்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு - கேரளா எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான தவ்ஃபிக் மற்றும் அப்துல் சமீம், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி பெங்களூருவில் சில மாதங்கள் தலைமறைவாகியிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முஸாபீர் ஹுசைன் ஆகியோர் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக, இவ்வழக்கில் என்.ஐ.ஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Comments