ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

0 455

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிதீர்ப்பதாக நினைவிடத்தில் பொற்கொடி, மகனுடன் சபதம் எடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை பிடித்துவந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் பொற்கொடி தனது நகையை அடமானம் வைத்து சுரேஷின் சகோதரர் பொன்னை பாலுவின் வங்கி கணக்கிற்கு ஒன்றாரை லட்சம் ரூபாயை அனுப்பியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக இந்த பணத்தை கொடுத்தாரா? என்ற கோணத்தில் விசாரித்தபோது தனது பங்காக அண்ணி பொற்கொடியிடம் இருந்து பணத்தை பெற்று அருளிடம் கொடுத்ததாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments