கடலூர் மாவட்டத்தில் ஊராட்சியில் ரூ.9 கோடி முறைகேடு புகார் என 65 கிலோ மனு எடுத்து கவுன்சிலர்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை வேண்டி 95 வயது பெண் ஒருவர் மனு அளித்தார்.
10 ஆண்டுகளாக மனு அளித்து வருவதாக கூறிய இறைப்பு வாரியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் நிலையைக் கண்டு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் தங்கள் கையில் வைத்திருந்த ஆயிரத்து 300 ரூபாயை மூதாட்டிக்கு வழங்கினர்.
கடலூர் மாவட்டம் அக்கடவல்லி ஊராட்சியில் 9 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அதனை விசாரிக்கக் கோரி அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி என்பவர் 65 கிலோ மனு மூட்டையோடு மனு அளித்தார். முறைகேடு குறித்து இதுவரையில் தான் அனுப்பிய மனுக்களின் ஜெராக்ஸ் தான் இந்த மூட்டை என அவர் தெரிவித்தார்.
Comments