சூடானில் உள்நாட்டு போரால் 1.70 கோடி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிப்பு
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் 15 மாதங்களாக நடந்துவரும் உள்நாட்டு போரால், ஒரு கோடியே 70 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வது தடை பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதனால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. போரில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், காலரா, டெங்கு, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் அங்கு வேகமாக பரவிவருவதாக உலக சுகாதர மையம் தெரிவித்துள்ளது.
Comments