சிறுமியுடன் பழகி இன்ஸ்டா மூலம் ஆபாச வீடியோ பதிவு செய்த இளைஞன்.. நட்பை முறித்த ஆத்திரத்தில் இணையத்தில் பதிவேற்றம்

0 642

கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் இன்ஸ்டா  வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பரப்பிய இளைஞர் மீதும் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் பலருக்கு அனுப்பியதாக 4 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் அபினேஷுக்கும் 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் வீடியோ கால் மூலம் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அபினேஷ் சிறுமியை தன்வயப்படுத்தி அவரை வீடியோ காலில் ஆபாசமாக பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அச்சிறுமி அபினேஷ் உடன் நட்பை  முறித்துக் கொள்ளவே, ஆத்திரமடைந்த அபினேஷ் தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோவை சமூக வலைதளத்தில்  பரப்பியுள்ளார்.

இதனை அபினேஷின் நண்பர்கள் 4 பேர் பதிவிறக்கம் செய்து அதனை மேலும் பலருக்கு சமூக வலைதளத்தில்  பரப்பியுள்ளனர். சிறுமியின் பெற்றோருக்கு தகவல்  தெரிந்து சிறுமியிடம் கேட்ட போது,  படிப்பிற்காக வாங்கி கொடுக்கப்பட்ட சிம் கார்டை பயன்படுத்தி அபினேஷுடனான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். பல முறை வீடியோ கால் மூலம் பழகிய நிலையில் தனது ஆபாச வீடியோவை அபினேஷ் பதிவு செய்து தன்னை மிரட்டி  வந்ததாகவும்  கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments