கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 534

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா

கருணாநிதி உருவம் பொறித்த நினைவு நாணயம் வெளியிடப்பட்டது

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ரூ.100 நினைவு நாணயத்தை வெளியிட்டார்

ராஜ்நாத்சிங் வெளியிட நினைவு நாணயத்தை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்

என்னுடைய உணர்வுகளை சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்: முதலமைச்சர்

நா நயமிக்க தலைவரை கொண்டாடும் விதமாக நாணயம் வெளியிடுவது பொருத்தமானது : முதலமைச்சர்

கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை ராஜ்நாத்சிங் வெளியிட்டது பொருத்தமானது : முதலமைச்சர்

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மனமார்ந்த நன்றி : முதலமைச்சர்

அனைத்து கட்சிகளுடன் நட்பு பாராட்டுபவராக ராஜ்நாத்சிங் இருப்பதால் நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைக்க முடிவு செய்தேன் : முதலமைச்சர்

பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட முதல் தேர்வாக ராஜ்நாத்சிங் இருந்தார்: முதலமைச்சர்

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட ராஜ்நாத்சிங்கை அனுப்பிய பிரதமர் மோடிக்கு நன்றி : முதலமைச்சர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சாதனை திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட பின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரை

கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்ய வேண்டும் என ராஜ்நாத்சிங் வேண்டுகோள்

நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார்: ராஜ்நாத்சிங்

தனது ஆட்சிக் காலத்தில் மாநில உரிமைகளுக்காக கருணாநிதி தொடர்ந்து போராடினார்: ராஜ்நாத்சிங்

மாநில எல்லைகளைக் கடந்து நாட்டின் தலைவராக திகழ்ந்த கருணாநிதி வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர்: ராஜ்நாத்சிங்

நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமூக நீதியின் அடையாளமாக கருணாநிதி திகழ்கிறார்: ராஜ்நாத்சிங்

நாட்டின் கூட்டாட்சியைப் பலப்படுத்தும் வகையில் தேசிய தலைவராக கருணாநிதி விளங்கியவர்: ராஜ்நாத்சிங்

கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை, துணிச்சல் மிக்கவை: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை திறம்பட செயல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி : ராஜ்நாத்சிங்

மகளிர் மேம்பாடு, விளிம்பு நிலை மக்கள் கல்வி பெற கருணாநிதி சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்: ராஜ்நாத்சிங்

மகளிர் அதிகாரம் பெறும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கிய பெருமைக்குரியவர் கருணாநிதி: ராஜ்நாத்சிங்

மக்களின் குறைகளை கேட்டறிய மனு நீதி என்ற நலத்திட்டத்தை கருணாநிதி செயல்படுத்தினார்: ராஜ்நாத்சிங்

1960-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வலுவான மாநில கட்சியாக தி.மு.க இருப்பதற்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி: ராஜ்நாத்சிங்

தமிழ் இலக்கியம், சினிமா துறையிலும் கருணாநிதி தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்: ராஜ்நாத்சிங்

உள்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை பெருக்கும் வகையில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது: ராஜ்நாத்சிங்

முன்னேற்றம், மக்களின் நல்வாழ்விற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கருணாநிதி: ராஜ்நாத்சிங்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கி முதலமைச்சர் சிறப்பித்தார்

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு நன்றி: தலைமைச் செயலாளர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments