ஊழியர் மகன்களின் இறை ஏற்பு விழா..சிங்கப்பூர் இருந்து வந்த தொழிலதிபருக்கு சாரட் வண்டியில் உற்சாக வரவேற்பு...
சிவகங்கை மாவட்டம் வளையம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் இல்ல விழாவிற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த தொழிலதிபருக்கு சாரட் வண்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனந்த் என்பவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட மேளாலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது 2மகன்களுடைய இறை ஏற்பு விழாவிற்கு அவரது நிறுவன உரிமையாளர் கென்ஜோங் யினுக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று விழாவிற்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான, வேஷ்டி சட்டை அணிந்து கென்ஜோங் பங்கேற்றார் .
Comments