ரூ.42 லட்சம் கொள்ளையடித்த வழக்கு.. 5 பேர் கைது - இருவருக்கு வலை..3 பேருக்கு காலில் மாவுக்கட்டு
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே, கடந்த 3 ஆம் தேதி டிரைவரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, லாரியில் இருந்த 42 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கில், முகமூடிக் கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 3 பேர் போலீசிடமிருந்து தப்பிக்க முயன்ற போது, கீழே விழுந்து கால் எலும்பு முறிந்த நிலையில் மாவுக்கட்டுடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments