போலீசாரின் விசாரணைக்கு பயந்து தப்பியோடிய இளைஞர் குளத்தில் குதித்து தப்பிக்க முயன்றபோது உயிரிழப்பு
கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து தப்பியோடிய இளைஞர் வாளாங்குளத்தில் குதித்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பந்தயசாலை பகுதியில் நடந்து சென்ற மூவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், விஷ்வா என்பவரின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாளாங்குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஷ்வா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது நண்பர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
Comments