ஓட்டலில் அழுகிய நிலையில் இருந்த இறைச்சி, உணவு பொருட்கள் அழிப்பு.. உணவு துறை அதிகாரிகள் அதிரடி

0 385

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவகம் ஒன்றில் குளிர்சாதனப் பெட்டியில் அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இறைச்சி மற்றும் பழைய உணவு பொருட்களையும், கடைகளில் தரமற்று இருந்த உணவு பொருட்களையும் பினாயில் ஊற்றி அழித்து அபராதம் விதித்தனர்.

சிவகங்கை காந்தி வீதியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் இருந்த காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடாத குளிர்பானங்களை அழித்தனர்.

பிரியாணியில் ரசாயன வண்ண பொடிகள் கலந்திருப்பதை கண்டறிந்த அதிகாரி, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments