ஸ்கூட்டியிலிருந்து குழந்தையுடன் கீழே விழுந்த தாய்..பின்னால் வந்த பேருந்து ஏறியதில் பெண் பலி

0 417

சென்னையை அடுத்த உத்தண்டியில், கிழக்குக்கடற்கரை சாலையில், ஹெல்மெட் அணியாமல், ஸ்கூட்டியில் 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி நிலை தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த அரசு பேருந்தின் முன்சக்கரம் ஏறியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த 4 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கானத்தூரை சேர்ந்த முத்தகஸ் அகமது-பெனாசிர் தம்பதியினர் தங்களது 4 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது குழந்தையுடன் மாமல்லபுரம் நோக்கி சென்றபோது, அதே மார்க்கத்தில் அதிவேகமாக வந்த கேரவன் வாகனம் ஸ்கூட்டியை உரசுவது போல் சென்றதில், நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

2 வயது குழந்தையும் முத்தகஸும் சாலையில் இடது பக்கமாக விழுந்த நிலையில், கைக் குழந்தையுடன் பெனாசிர் வலது பக்கமாக விழுந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments