அரசுக்கு வரி செலுத்தாத 3 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

0 346

அரசுக்கு வரி செலுத்தாமல் இருப்பதற்காக உரிய அனுமதி பெறாமல் திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சியில் இயங்கி வந்த 3 நிறுவனங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

அனுமதி பெறாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசன் தொடுத்த வழக்கில் உரிய ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதனடிப்படையில் ஆய்வு நடத்தியதில் 5 நிறுவனங்கள் வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் அனுமதி கோரி 2 நிறுவனங்கள் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments