70 பொது கழிப்பிடங்களில் சென்னையில் டபுள் வசூல்... பெண் பணி நீக்கத்தால் அம்பலம்..!
சென்னையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாதம் தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி தனியார் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட 70 பொதுக்கழிப்பிடங்களில் பெரும்பாலானவற்றில் மக்களிடம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 700-க்கு மேற்பட்ட மாநகராட்சி பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் இருந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சில கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் ஒப்பந்தம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
தனியாரிடம் ஒப்படைத்தாலும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கூறி இதற்காக பராமரிப்பு கட்ணமாக ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி வழங்கி வரும் நிலையில் பெரும்பாலான கழிப்பிடங்களில் ஒந்த ஊழியரகளை வைத்து ஆயிரக்கணக்கில் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
முதற்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 70 கழிப்பிடங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தினந்தோறும் அதிகளவு மக்கள் வந்து செல்லும் எழும்பூர் புறநகர் ரயில் நிலையம் எதிரே உள்ள சென்னை மாநகராட்சியின் இலவச கழிப்பிடம் உட்பட 13 க்கும் மேற்பட்ட மாநகராட்சியின் இலவச கழிப்பிடங்களை ஒப்பந்தம் எடுத்துள்ள DR RSB PCT ONE PVT LTD., என்கிற தனியார் நிறுவனத்தின் மேற்பாரவையாளர் சீனு என்பவர் வசூல் செய்து கொடுக்க மறுத்த தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாக மல்லிகா என்ற பராமரிப்பு பணியாளர், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக ராயபுரம் மண்டல அலுவலர் தமிழ் செல்வனிடம் விளக்கம் கேட்டபோது, மாநகராட்சி கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கழிப்பிடங்களில் சட்ட விரோதமாக வசூல் நடை பெறுவதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள வழக்கறிஞர் ருக்மாங்கதன், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
Comments