குரங்கு அம்மை பரவலைத் தடுக்க பாகிஸ்தான் விமான நிலையங்களில் சோதனை
பாகிஸ்தான் விமானநிலையங்களில் குரங்கு அம்மை தடுப்புக்காக மருத்துவக் குழுவினர் குவிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது.
கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வந்த வளைகுடாப் பயணி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த 2022 முதல் பரவி வரும் குரங்கு அம்மை தற்போது தீவிரமடைந்திருப்பதால், சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆப்பிரிக்கா, காங்கோ குடியரசு பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments