"அமெரிக்காவில் இருந்தாலும் அரசையும், கட்சியையும் கவனிப்பேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1092


முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும், அங்கிருந்தபடியே கட்சியையும், அரசையும் கவனிக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கட்சியில் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும் என்றார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், நிதி பகிர்வில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக்கூறி கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments