குரங்கு அம்மை நோய் - விமான நிலையம், துறைமுகங்களில் சோதனை செய்ய அறிவுறுத்தல்: பொது சுகாதாரத்துறை

0 369

குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துமாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சர்வதேச எல்லைகள் மூலம் குரங்கு அம்மை நோய் பல நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் பயணித்தவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகங்கள் விமான சேவை நிறுவனங்களுடன் சேர்ந்த தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments