ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..? குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள WHO
குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில்,
ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு அந்நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
116 நாடுகளில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது பரவி வரும் குரங்கு அம்மையின் புதிய வகைக்கு clade 1b mpox என பெயரிடப்பட்டுள்ளது. இது முந்தைய வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Comments