இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றிபெற ஆந்திராவின் செங்காளம்மன் கோயிலில் வழிபாடு செய்த சோம்நாத்
இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தரிசனம் செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், எஸ்.எஸ்.எல்.வி. வரிசையில் 3ஆவது மேம்படுத்தப்பட்ட ராக்கெட்டான SSLV-D3 விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்டப்பணிகள் நடைபெறுவதாக கூறினார்.
3 முக்கிய கருவிகளுடன் அனுப்பப்பட உள்ள புதிய செயற்கைக்கோள் பல்வேறு புவி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments