வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டது - ஷேக் ஹசீனா

0 550

வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களே அரங்கேற்றப்பட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

தமது மகன் சஜீப் வாசத்தின் சமூக வலைதளப் பக்கம் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள 3 பக்க அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், கலாச்சார பணியாளர்கள், சாமான்ய மக்கள் எனப் பலரும் வன்முறையில் உயிரிழந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments