தேசியக் கொடி ஏந்தி பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணி.. தேசியக் கொடியை கழற்றிவிட்டு செல்லும்படி கூறிய போலீசாருடன் வாக்குவாதம்

0 430

சுதந்திர தினத்தையொட்டி வேலூர் கோட்டைக்குள் 78 அடி நீள தேசியக் கொடியுடன் நுழைய முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வாக்குவாதத்துக்குப் பிறகு, மக்கான் பகுதியில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு ஊர்வலமாகச் சென்று மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவினர், தேசியக் கொடி ஏந்தியபடி இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். ஆயில் மில் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திரும்பிச் செல்லும்போது, வாகனங்களில் கட்டியிருக்கும் தேசியக்கொடியை கழற்றிவிட்டுச் செல்லும்படி கூறிய போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்து, மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments