78-வது சுதந்திர தினம்.. தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்

0 290

78-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கும், கல்பனா சாவ்லா விருது கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கும் வழங்கப்பட்டது.

இவை தவிர, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான விருது, மகளிர் நலனுக்கான சேவை புரிந்தவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது, முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆகியவை வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments