ஜெர்மனியில் 5 ஆண்டுக்கு முன்பு திருடு போன ஆபரணங்கள் மீட்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைப்பு
ஜெர்மனியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச் சென்ற ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிரெஸ்டன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 4,300 வைரங்கள், தங்க நகைகள், தங்க போர் வாள் போன்ற ஆபரணங்களை திருடிய குற்றத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments