கேட்டரிங் பயிற்சிக்கு சென்ற மாணவி மரணம்... உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார்

0 527

கொல்லிமலையில் மகேந்திரவனம் என்ற தனியார் ஹோட்டலில் பயிற்சி மேற்கொள்ளச் சென்ற 17 வயது கேட்டரிங் மாணவி உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நல்லிபாளையம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம் கல்யாணியைச் சேர்ந்த கோபிகா, கொல்லிமலை ஹோட்டலில் சக மாணவிகளுடன் தங்கியிருந்த அறையின் கழிவறையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கோபிகா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் கோபிகாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments