அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் கடைமடை பகுதியிலுள்ள குளங்களில் நீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் வறட்சியாக உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதற்காக சுமார் 1652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து, ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காளிங்கராயன்பாளையத்தில் உள்ள அணைக்கட்டின் அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து குழாய் மூலம், பெருந்துறை, ஊத்துக்குளி, திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஏரிகள், 971 குளங்கள் என மொத்தம் 1045 ஏரி குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திட்டத்தின் கடைமடை பகுதிகளான, சம்பமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 குளங்களுக்கு சோதனை ஓட்டத்திற்கான தண்ணீர் கூட வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்ள்ளனர்.
Comments