தமிழகத்தில் உள்ள 8 நவகிரகக் கோவில்கள் மேம்பாடு... இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

0 613

மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் பிரசாத் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள எட்டு நவகிரகக் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

திங்களூர் கைலாசநாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில், சூரியனார்கோவில் சிவசூரிய பெருமாள் கோவில் ஆகிய கோயில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.

அதற்கான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments