பிரிட்டனில் அண்மையில் வெடித்த கலவரங்கள்.. புலம்பெயர்ந்தவர்களை குறிவைத்து கலவரக்காரர்கள் தாக்குதல்.. 1,024 பேரை கைது

0 453

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கலவரங்கள் தொடர்பாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில், கடந்த மாதம் 17 வயது சிறுவன் ஒருவன் நடனப் பள்ளிக்குள் புகுந்து  கத்தியால் குத்தியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். புலம்பெயர்ந்த சிறுவன் இந்த பாதகச் செயலை செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பட்ட வதந்திகளை தொடர்ந்து இங்கிலாந்தில் கலவரங்கள் வெடித்தன.

ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் நடந்த கலவரங்களில் புலம்பெயர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். அது தொடர்பாக 1,024 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக 11 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும் கைதானது புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments