ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை... 108 விளக்கு பூஜையில் பங்கேற்று பெண்கள் சிறப்பு வழிபாடு

0 512

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காக108 பெண்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற 24 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது. குத்துவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம், பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஆதிநாராயண பெருமாள் உடனாகிய செங்கமலவல்லி தாயார் கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments