வங்கதேசத்தில் வெடித்த வன்முறை.. மத பாகுபாடின்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பதாக உறுதியளித்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்

0 482

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்,  இந்து அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார்.

டாக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற தாகேஷ்வரி கோயிலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்தார்.

இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு அவர் நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவார் என இந்து அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

வங்கதேசத்தின் 17 கோடி மக்கள் தொகையில், 8 சதவீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments