மிஸ்டர் டைரக்டர் மிஷ்கின்.. நீங்க இப்படி பேசுவது சரியா..? உச்சக்கட்ட புரமோசன் வெறி.. சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆச்சு..?

0 1076

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாக உள்ள கொட்டுக்காளி என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின், இந்த படத்தின் இயக்குனர் தன்னை செருப்பால் அடித்து விட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்..

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் , சூரி நடிப்பில் வெளியாக உள்ள கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், படத்தின் இயக்குனரை வெகுவாக பாராட்டியதோடு, இந்த படத்தை மக்கள் பார்ப்பதற்காக நிர்வாணமாக கூட நிற்கத் தயார் என்றார்

பெண்மையை பேசும் இந்தப்படம் சாதிக்கு எதிரானது என்றார் இயக்குனர் வெற்றிமாறன்

தனக்கு சிவகார்த்திகேயன் வாழ்க்கை கொடுத்திருப்பதாக படத்தின் இயக்குனர் வினோத்ராஜ் பேசிய நிலையில், நான் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை என்ற சிவகார்த்திகேயன், நான்தான் சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று பலர் கூறிவிட்டனர் ஆனால் நான் அப்படிபட்ட ஆள் இல்லை என்றார்

நன்றி மறந்த சிவகார்த்திகேயன் மறைமுகமாக நடிகர் தனுஷை விமர்சித்து இருப்பதாக கூறி இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments