மதுரையில் சொந்த அண்ணனால் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம்... பெண்ணின் கணவர், சகோதரி, அண்ணன் மகனும் கைது

0 560

மதுரையில் உடன் பிறந்த சகோதரனால் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக இறந்த பெண்ணின் கணவரான ராணுவ வீரர் உட்பட குடும்பத்தினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கீரைத்துறையைச் சேர்ந்த திலகவதி, தனது கணவரான ராணுவ வீரர் கண்ணனைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வேறொரு நபருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த திலகவதியின் அண்ணன் தமிழ்ராஜா, தனது தங்கையின் கழுத்தில் கயிறை சுற்றி இறுக்கிக் கொலை செய்ததாக கடந்த 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா என திலகவதி வீட்டிற்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கொலை நடந்த அன்று திலகவதியின் கணவர் கண்ணன், சகோதரி தமிழ்ச்செல்வி மற்றும் கைதான சகோதரன் தமிழ்ராஜாவின் மகன் அஜய் ஆகியோரும் கொலை நடந்த வீட்டுக்கு வந்து சென்றதை உறுதி செய்தனர்.

மூவரை பிடித்து விசாரித்ததில் திலகவதியிடம் தவறான தொடர்பை கைவிடுமாறு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், ஆனால் தனது தொடர்பை கைவிட மறுத்ததால் 4 பேரும் சேர்ந்து திலகவதியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments