நேரு, இந்திரா காந்தியை பின்தொடர்ந்து 11-வது ஆண்டாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி சாதனை

0 522

பண்டித நேரு, இந்திரா காந்திக்குப் பின் தொடர்ந்து 11-ஆவது ஆண்டாக செங்கோட்டையில் கொடியேற்றும் மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை வரும் 15-ஆம் தேதி மோடி பெறுகிறார்.

நேரு தொடர்ந்து 17 ஆண்டுகளும், இந்திரா காந்தி 16 முறையும் செங்கோட்டையில் கொடியேற்றியுள்ளனர். செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2047-இல் இந்தியா வல்லரசாகும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதால், தமது உரையின் போது பிரதமர் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments